Filter Coffee with Saithapetta Sathasivam

logo design



FACT:
In the same period of time a Madras Tamilar can convey 1.5 times that of a Madurai,Tirunelveli Tamilar and 3 times that of an Erode Tamilar and 5 times that of a Coimbatore Tamilar (depending on the length of the drawl like 'yaeeeeeeenunga?')
 -anonymous

ஹாய் சைதாபேட்ட  சதாசிவம் எப்படி இருக்கீங்க ?
                              படு சோக்கா ஈக்றேன்  பா ..நீ எப்டி அண்ணாத்த  ஈகிற?

நான் ரொம்ப நல்லா இருக்கேன்.எங்க ஷோ லே கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.
எப்படி feel பண்றீங்க ?
  show என்னமோ குஜாலா  தான் ஈகுது.  ஆனா மெட்ராஸ் சம  வெயிலா ஈக்குது  பா. வூட்டாண்ட சொல்லிகினு travel  செஞ்சு இந்தாண்ட வர்ற சொல்லயும் சம காண்டாயிடுச்சு.வேர்துகுனே குந்திகினு ஈகிறேன் பா.right u இன்னாத்துக்கு வர்ற சொன்ன நீ.  புள்ளைங்கள இஸ்கூலுக்கு ready பண்ணனும்.இன்னா  வேணும் உன்கு.

வேற ஒன்னும் இல்ல சதாசிவம் . மெட்ராஸ் பாஷா பத்தி ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் பண்ணலாமேன்னு 
உங்கள கூபிட்டோம் .மெட்ராஸ் பாஷைய பத்தி உங்க கருத்து  என்ன?

 அது சொல்லி தான் வர சொன்னியா  அண்ணாத்தே. இன்ன சொல்றது. நான் கூவ ஆரம்பிச்சா  போய்கினே இருபேன். கப்சா விடுறேனு  காண்டாயிடாத  நீ. மெட்ராஸ் பாஷா மாதிரி world  ஆண்ட ஒண்ணுமே கடயாது .எங்கள மாதிரி தமிழ் இங்கிலீஷ் கலந்து கூவ முடியுமா எவனாச்சும்.ஒரு 
dommai  ஆலும்  முடியாது. example  சொல்றேன் கேளு. எவனாச்சும் over ah  கூவுனானு  வெச்சுக்க . 'டேய் மொள்ளமாரி இன்னா  sound  விட்றியா' அப்டினு  கனைபோம் .யாராச்சும் sentiment  ஆயிட்டான்னு  வெச்சுகோ  'இன்னா feelings ah  மாமா ?' அப்டின்போம். figure  ah  பாத்தா  'look  விடுறியா ' அப்டின்போம். இப்டி நறிய ஈகுது பா.

அற்புதம் ah  சொன்னீங்க சதாசிவம். அது மட்டும் இல்ல. மெட்ராஸ் பாஷை 
அப்டினாலே
 எல்லாருக்கும் முதல்ல ஞாபகம் வர்றது 
 கெட்ட  வார்த்தைங்க தான். அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

                          அது சும்மா நீண்டுகினே போவும் மாமு. கைத , கஸ்மாலம் , பேமானி, சோமானி, சாவுக்றாகி , பொறம்போக்கு, முடிச்சவுக்கி, மொள்ளமாரி  இப்டி நறிய ஈகுது பா. இதெல்லன்காட்டியும் ஓ*தா தான் சம bad  word .இன்னாத்துக்கு அதெல்லாம் remind  பண்ற.  எனக்கு mood spoil  ஆயிடும் பா.   

மன்னிச்சிருங்க சதாசிவம். ஓகே சதாசிவம் உங்களுக்கு சினிமா பாக்குற
 பழக்கம் உண்டா??
       
                       இன்ன அண்ணாத்தே  மொக்கையா  question  பண்ற . Cinema  இல்லாமே  தமிழ் நாடே கடயாது .matter  uku  வா  நீ.

ஓகே ஓகே சதாசிவம்.  உங்களுக்கு புடிச்ச நடிகர் யாரு?

                       நம்ம கமல் ஸாரு  தான் பா. சும்மா ரவுண்டு கட்டி மெட்ராஸ் தமிழ் பேசுவாரு பாரு . மத்த  actors  கு டப்பா டான்ஸ் ஆடிடும். ஸாருக்கு அதெல்லாம்  சல்ப  matter u . அவரு act  பண்ண movie  ல இருந்து ஒரு comedy  scene  u  போடு அண்ணாத்தே . 

கண்டிப்பா சதாசிவம். உங்களுக்காக ஒரு காமெடி சீன் போடுறோம்...


சரி சதாசிவம் ஷோ ஓட முடிவுக்கு வந்துட்டோம். இந்த ஷோ ரூல்ஸ் படி நீங்க ரசிகர்களுக்கு எதாவது song dedicate  பண்ணனும். என்ன song  dedicate  பண்ண விரும்புறீங்க?

                                         ஜோரா நம்ம language  song  podu  அண்ணாத்தே. நம்ம fans பாத்து ஜல்சா  பண்ணட்டும் . ..அப்போ நான் கலண்டுகிறேன் பா. வர்டா மாமு .

கண்டிப்பா சதாசிவம் ரொம்ப நன்றி நீங்க இந்த ப்ரோக்ராம் லே 
கலந்துகிட்டதுக்கு.
வூட்டாண்ட அல்லாரையும் விசாரிச்சதா சொல்லுங்க.
                     
(Show ends)

Reference:
http://slangmela.pbworks.com/w/page/9837645/Chennai%20Slang

2 comments:

Parameshwar Ramanan said...

படா ஷோக்கா சொன்னபா நீ! :)

Vijay said...

danks pa...comment sonnathuku ..happy ah iruku :)

Powered by Blogger.

Followers

Follow by Email

Popular This Month